கோயம்புத்தூர் பாப்பம்பட்டி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. தனியார் நிர்வாகத்தினர் இந்த கோவிலை பராமரித்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கு இந்த கோவிலில் 40 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது.

இந்த கோவிலை இந்து சமய அறநிலை துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என தனியார் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமார் மனு அளித்தார்.12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நடவடிக்கை எடுத்து கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவதற்கு உதவி ஆணையரான இந்திரா என்பவர் மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.  அவ்வளவு பணத்தை கொடுக்க முடியாது என்ன சுரேஷ்குமார் கூறியதால் இறுதியாக 1.5 லட்சம் பணத்தை வாங்கிக் கொள்ள இந்திரா முன் வந்தார்.

நேற்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் அருகே இருக்கும் ஒரு சாலையில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இந்திராவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்திராவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.