தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மெகாவில் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மிகாவேல் கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகி உள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில் 6 மாதங்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது மிகாவேல் பாலியல் தொந்தரவு அளித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மிகா வேலை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
