சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில் அங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சிக்காக வருகிறார். இந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் இவருடன் ராஜ்குமார் நன்றாக பழகி வந்தார்.

இந்நிலையில் ராஜ்குமார் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கிய நிலையில் தன் காதல் குறித்து அந்த பெண்ணிடம் கூறினார். அதோடு அந்த பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் பணமும் வாங்கியுள்ளார். அந்த பெண்ணிடம் ராஜ்குமார் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிய நிலையில் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் தான் கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டார்.

ஆனால் அதற்கு அந்த நபர் வேலையை காலி செய்து விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் அவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.