வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரி வளாகத்திற்குள் பி.எஸ்சி மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி வளாகத்திலேயே பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலை, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் உயிரிழந்த மாணவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

“>

இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், இது முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கல்வி நிறுவனங்களுக்குள் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பாதுகாப்புக் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.