தில்லியில் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் ஜமா மஸ்ஜித் சந்தையில், திருட முயன்ற ஒரு நபரை இளைஞர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மக்களின் பைகளில் இருந்து திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அந்த நபரை, ஒரு விழிப்புணர்வுள்ள நபர் பின்தொடர்ந்து சென்று கண்காணித்துள்ளார்.

மேலும் திருடன் தனது கைவரிசையைக் காட்டிய தருணத்திலேயே அவரைப் பிடித்த அந்த இளைஞர், “முழு வீடியோவையும் நான் எடுத்துவிட்டேன்” என்று உரக்கக் கூறி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடிபட்ட நபர் அங்கிருந்து தப்பிக்க முயன்ற போதிலும், அந்த இளைஞர் வீடியோ ஆதாரத்துடன் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

“>

இந்நிலையில் சந்தை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பொதுமக்கள் தங்களது உடைமைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. திருடனைத் துணிச்சலுடன் பிடித்து வீடியோ எடுத்த இளைஞரின் செயலுக்கு இணையவாசிகள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.