திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் ஊராட்சியில் காரியாங்குடி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 30 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற சத்துணவு கூட பணியாளர்கள் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமைப்பதற்காக சத்துணவு கூடம் அருகே சென்றுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்துணவு கூட பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்த போது சத்துணவு கூடத்தில் இருந்து பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து சத்துணவு பணியாளர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்தினிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாட்டர் டேங்க் உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் மனித மலக்கழிவு கலக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் அப்பகுதியை சேர்ந்த சமூக விரோதிகள் சிலர் அவர்கள் வாங்கி வந்த கோழி மற்றும் மது பாட்டில்களை பள்ளி வளாகத்தின் உள்ளே எடுத்து வந்து சத்துணவு கூடத்தில் உள்ள பொருட்களை எடுத்து கோழியை சமைத்தும் மது அருந்தியும் உள்ளனர் என தெரியவந்தது.
பின்பு தண்ணீர் டேங்க்கை உடைத்து அதில் மனித மலக்கழிவுகளை கலந்து உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த அசம்பாவிதத்தை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது திருவாரூர் மாவட்டத்தில் காவலராக பணிபுரியும் ஒருவரின் சொந்த சகோதரர்கள் இருவரும் அவர்களுடன் சேர்ந்து மற்றொரு நபர் என மூன்று பேர் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டனர்.
எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். அதேபோன்று 3 நபர்களுமே கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் புரட்சியை வெடித்துள்ளது.
