உத்தரப்பிரதேசத்தில் ‘குட்டி யோகி’ (Little Yogi) என்று அழைக்கப்படும் பிரசாந்த் மிஸ்ரா என்பவர், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பசுப் பாதுகாப்பைக் கையில் எடுத்துள்ள அவர், “பசுவைக் கொல்பவர்களைப் பகிரங்கமாகத் தூக்கிலிடுவேன்” என்றும், “மசூதி மீது ஏறி காவிக்கொடி ஏற்றுவேன்” என்றும் ஆவேசமாக முழங்கியுள்ளார்.

​மத உணர்வுகளைத் தூண்டி, வன்முறைக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ள பிரசாந்த் மிஸ்ராவின் இந்தப் பேச்சுக்கு இணையதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. “சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், பொதுவெளியில் இப்படி கொலை மிரட்டல் விடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே சில பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், ‘குட்டி யோகி’யின் இந்த அதிரடி முழக்கம் உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.