மெக்கானிக் ஒருவர் கொடுத்த தவறான ஆலோசனையை நம்பியதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாத்தா என நான்கு பேர் உறக்கத்திலேயே உயிரிழந்த இதயத்தை ரணமாக்கும் சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் கடும் வெப்பம் நிலவியதால், வீட்டின் அறையில் ஏசி-யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மெக்கானிக்கிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

அப்போது மெக்கானிக் சொன்ன ஒரு தவறான நுட்பத்தை பின்பற்றி ஏசி-யை இயக்கிவிட்டு அனைவரும் உறங்கியுள்ளனர். ஆனால், நள்ளிரவில் ஏசி-யில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த அறை முழுவதும் மெல்ல மெல்ல நச்சு வாயு பரவியுள்ளது.

இதனை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாத்தா மற்றும் மூன்று சிறுவர்கள் அந்த நச்சு வாயுவை சுவாசித்ததில் மூச்சுத்திணறி படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்கானிக்கின் ஒரு சிறிய கவனக்குறைவான ஆலோசனை, இன்று ஒரு அழகான குடும்பத்தையே சிதைத்துப்போட்டுள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.