இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஒரு வீடியோ இப்போது இணையதளத்தையே இரண்டாகப் பிளந்துள்ளது. ஒரு காட்சியில், வெளிநாட்டுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்து, நமது கலைகளை மிக மரியாதையுடனும், பெருமையுடனும் உலகிற்குப் பறைசாற்றுகின்றனர். அந்த அந்நிய நாட்டு மாணவர்களின் முகத்தில் தெரியும் அந்தப் பெருமிதம் ஒவ்வொரு இந்தியனையும் வியக்க வைக்கிறது.
ஆனால், மறுபுறம் இந்தியாவிலேயே இருக்கும் ஒரு சிபிஎஸ்சி பள்ளியில், மாணவிகள் ‘டவல்’ அணிந்து கொண்டு ஆபாசத் தூக்கலாக ஆடிய நடனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நமது மண்ணின் மகத்துவத்தை வெளிநாட்டவர்கள் கொண்டாடும் போது, நாமே அதைச் சீரழிப்பதா?” என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். “வெள்ளைக்காரன் நமது வேர்களைத் தேடுகிறான், ஆனால் நாம் நமது வேர்களை வெட்டுகிறோம்” எனப் பலரும் இந்த முரண்பட்ட காட்சிகளைப் பகிர்ந்து சாடி வருகின்றனர்.
