தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ரகு என்பவர் ஒரு பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்தச் சிறுமியிடம் நயமாகப் பேசிய ரகு, அவரைத் தனியாகத் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

படம் முடிந்து வீடு திரும்ப தாமதமானதால், அன்று இரவு சிறுமியைத் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.அந்த நள்ளிரவு நேரத்தில், சிறுமியை மிரட்டி ரகு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, பலமுறை அந்தச் சிறுமியை மிரட்டி அவர் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி எதிர்பாராத விதமாக கர்ப்பமடைந்தார். சமீபத்தில் சிறுமிக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தினர்.இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ரகுவை அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.