மும்பை பகுதியில், தொலைபேசியில் பேசிக்கொண்டே கார் ஓட்டிய பெண் மோதியதில் 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காரை ஓட்டி வந்த பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த அன்ஷ் ரவீந்திர குப்தா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளான். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஜான் பாப்டிஸ்ட் சாலையில் உள்ள ஜிஜாமாதா தோட்டத்திற்கு முன்னால் சிறுவன் சாலையைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பாந்த்ராவைச் சேர்ந்த 45 வயதான மேகா ராவல் என்பவர் தனது இன்னோவா கிரிஸ்டா காரை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டே காரை ஓட்டியதால், சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது கார் மோதியுள்ளது.

கார் மோதியதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பாந்த்ரா காவல்துறையினர், கார் ஓட்டிய மேகா ராவல் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.