மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் உள்ள ஒரு மின்மயானம் அல்லது இறுதிச் சடங்கு நடைபெறும் மயானப் பகுதியில், பெண் ஒருவர் மனித எச்சங்களை தேடி எடுத்து உட்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், உடல் முழுவதும் சாம்பல் பூசியும், கருப்புத் துணியை அணிந்தபடியும் ஒரு பெண் காணப்படுகிறார். ‘காளி நந்த் கிரி’ என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், எரியும் சிதைுகளுக்கு மிக அருகில் சென்று, எலும்புகளையும் மண்டை ஓட்டையும் தேடுகிறார்.
MP के उज्जैन जिले में तंत्र-मंत्र साधना के नाम पर श्मशान में शव के साथ छेड़छाड़
वीडियो में काली नंद गिरि नाम की महिला श्मशान में जलती चिताओं के पास तांत्रिक क्रियाएं करती नजर आ रही है।
वह शव से हड्डियां और खोपड़ी तलाशकर शव के मांस का सेवन करती हुई दिखाई दे रही है। pic.twitter.com/DmZYYUx8ly
— Ranjeet kumar Yadav (@RanjeetkrYdv) August 30, 2026
அங்கு எரியும் பிணத்திலிருந்து சூடான மாமிசத்தை வெளியில் எடுத்து அவர் சாப்பிடுவதைப் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அதுமட்டுமின்றி, கையில் ஒரு வாளுடன் வலம் வந்த அவர், “இதோ பாருங்கள், இப்போதுதான் எடுத்தேன். மிகவும் சுவையாக இருக்கிறது. என்னை விட்டு விலகி இருங்கள்” என்று மிரட்டும் தோரணையில் பேசும் வசனங்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் தொடர்ந்து பேசிய அந்தப் பெண், “சாம்பல் பூசுவதும், மண்டை ஓடுகளுடன் விளையாடுவதும் எங்கள் வேலை. இதுதான் எங்கள் வாழ்க்கை முறை. நாங்கள் மனித மாமிசத்தை இப்படித்தான் உண்கிறோம். உங்களின் கற்பனைக்கும் எட்டாத பல காரியங்களை எங்களால் செய்ய முடியும்” என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார். வீடியோவின் இறுதியில் அவர் மயானம் தொடர்பான சில மந்திரங்களையும் உச்சரிக்கிறார்.
இறந்தவர்களின் உடல்களைச் சிதைப்பதும், மயானத்தில் உள்ள மனித எச்சங்களை சேதப்படுத்துவதும் சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை காவல்துறை தரப்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலோ எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனினும், இந்தச் சம்பவம் உண்மையா அல்லது சமூக வலைதளங்களில் பரபரப்புக்காக திட்டமிடப்பட்டுப் பரப்பப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக வலைதள பயனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
