நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் வடிந்த பிறகு, அதன் பேரழிவு விளைவுகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெள்ளத்தால் மக்கள் பலர் தங்கள் வீடுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு நாயின் வீடியோ அனைவரின் நெஞ்சையும் உருக வைத்துள்ளது. இடிந்து விழுந்த ஒரு வீட்டின் வாசலில் அந்த நாய் உதவியற்ற நிலையில் நின்று கொண்டிருப்பது அதில் காணப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த வீட்டின் குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டனர். ஆனால், அது தெரியாத அந்தப் பாவப்பட்ட நாய், தன் உரிமையாளர் மீண்டும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு கடந்த ஐந்து நாட்களாக அங்கேயே காத்திருக்கிறது.
சுற்றிலும் மண்ணும் இடிபாடுகளும் சூழ்ந்திருக்கும் நிலையிலும், தன் உரிமையாளரின் வருகைக்காக ஏங்கும் நாயின் கண்கள் காண்போரைச் சோகத்தில் ஆழ்த்துகின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இந்த வெள்ளம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
बाढी प्रभावित क्षेत्र बेत्रावती मा कुकुरले माटो खाएर बसिरहेको छ। प्लिज, बोल्न नसक्ने जनावर लाई पनि रासनको व्यवस्था गर्नुस्। प्राण त मानिसको जस्तै होनि कुकुरको पनि।😴 pic.twitter.com/i1xvhwzfGv — Nirmal Prasai🇳🇵 (@NirmalPrasai5) August 30, 2026 “>
இந்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பல இணையவாசிகள் தங்களது சோகத்தையும் உணர்வுகளையும் கருத்துக்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
