நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை என்றும், அதில் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, இந்திய ராணுவ விமானங்கள் மூலம் உணவு மற்றும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், நேபாள வெள்ளத்தில் தாய் ஒருவர் தனது இரு மகள்களைக் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. பள்ளிச் சீருடையுடன் நின்று கொண்டிருந்த மகள்களைக் கண்டதும், மலைவெள்ளத்தின் வேகத்தைப் பார்த்து நொடிப் பொழுதும் யோசிக்காமல் தாய் அவர்களை அழைத்துக்கொண்டு ஓடுகிறார்.
அப்போது சாலையில் தடுக்கி விழுந்தபோதிலும், உடனடியாகச் சாதுரியமாக எழுந்து இரு பிள்ளைகளின் கைகளையும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மலையை நோக்கித் தப்பி ஓடி உயிர் பிழைத்துள்ளார். வெறும் 2 வினாடி தாமதித்திருந்தாலும் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்பதால், அந்தத் தாயின் வீரத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்றொரு வீடியோவில், சுற்றியிருந்த அனைத்து வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும், அசையாமல் நின்ற புகழ்பெற்ற இரண்டு மாடி பச்சை நிற வீட்டின் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுற்றிலும் நீர் சூழ்ந்த நிலையில், வீட்டில் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
Sirf 2 second ki deri hoti, maa apni dono betiyon ke saath paani mein sama jaati. pic.twitter.com/Fzy2a2RBy5 — Maratha Newz (@Maratha_NEWz) August 29, 2026 “>
இயற்கையின் உக்கிரமான தாண்டவத்தால் நேபாளத்தில் எங்கும் சேறும் சகதியுமாக மாறியுள்ள நிலையில், இந்த இரு காணொளிகளும் அங்குள்ள பேரழிவின் கொடூரமான நிதர்சனத்தை உலகிற்கு உணர்த்துகின்றன.
