உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள புகழ்பெற்ற கார்டன் கேலரியா மாலில் உள்ள ஒரு மதுக்கடையில், பவுன்சர்களுக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபரை பல பவுன்சர்கள் சேர்ந்து கீழே தள்ளி, சரமாரியாக மிதிப்பதையும் கைகளால் கொடூரமாக தாக்குவதையும் காண முடிகிறது. அந்த நபர் தப்பிக்க முயன்றபோதும், அவரை விடாமல் துரத்திச் சென்று அங்கிருந்த மற்றவர்கள் முன்னிலையிலேயே மிக மோசமாகத் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பவுன்சர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உயர்தர மால்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது பொதுமக்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சட்டத்தை மதிக்காமல் அராஜகத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.