குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தேர்வு நடந்து கொண்டிருந்தபோது தாமதமாக வந்த மாணவன் ஒருவன், தட்டிக்கேட்ட பெண் ஆசிரியையை வகுப்பறையிலேயே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவன் ஏன் தாமதமாக வந்தாய் என்று ஆசிரியை கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்து, அனைவர் முன்னிலையிலும் ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளான்.

இந்த மொத்தக் காட்சியும் வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. தகவலறிந்து வந்த போலீசார், அந்த மாணவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கூடம் போன்ற புனிதமான இடத்தில் மாணவன் இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.