உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில், திருட்டுப் புகார் சுமத்தப்பட்ட 7 வயது சிறுவன் ஒருவனை சுமார் ஐந்து மணி நேரம் டீப் பிரீசருக்குள் பூட்டி வைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு பட்டறை உரிமையாளர், அந்தச் சிறுவன் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகித்து இந்தத் தண்டனையை அளித்துள்ளார்.

பிரீசருக்குள் அடைக்கப்பட்ட சிறுவன் பயந்து அழுது கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனை ஐந்து மணி நேரம் குளிரூட்டியில் அடைத்து வைத்ததுடன், அவனை மிரட்டியும் துன்புறுத்தியுள்ளனர்.

“>

 

இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.