சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. சமூக ஊடகங்களில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் நாயும் பூனையும் ஒரு அறையில் அமர்ந்திருக்கிறது. நாய் நல்ல வாட்டசாட்டமாக அமர்க்களமாக அமர்ந்துள்ள நிலையில் அருகில் இருக்கும் பூனை சாதாரண தோற்றத்தில் உள்ளது. ஆனால் பூனையின் கொழுப்பு சாதாரணமல்ல. மீண்டும் மீண்டும் அந்த நாயை வம்பு இழுக்கின்றது. நாயின் கை கால்கள் மற்றும் கன்னம் என அனைத்து பகுதிகளிலும் தட்டி தட்டி அந்த பூனை பாடாய்ப் படுத்துகின்றது.
ஆனால் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் நாய் அப்படியே அமர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே பொறுமையாக இருந்த நான் ஒரு கட்டத்தில் கையை உயர்த்தி அதை அடிப்பது போல வருகின்றது. அதனை கண்டதும் பூனை அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடுகின்றது. இந்த வேடிக்கையான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
The dog is not impressed.. 😂
🎥 IG: franklinthenewf pic.twitter.com/U9YjQaReqV
— Buitengebieden (@buitengebieden) August 2, 2023
