சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. சமூக ஊடகங்களில் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நாய் ஒன்றின் எதிரே மற்றொரு நாள் இருக்கின்றது. இரண்டு செல்லப் பிராணிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ள நிலையில் அதில் சிறிய அளவில் இருக்கும் ஒரு நாய் பெரிய நாய்க்கு முத்தம் கொடுக்கின்றது. அதனால் சரக்கு அடித்தது போல போதை ஏறி அந்த நாய் மிக வேகமாக சுழன்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது. தற்போது இந்த வீடியோ வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.