அண்மை கால அரசியல் சூழலில் திமுகவின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS), தனது அண்மைய பேச்சில் கட்சி தொண்டர்களின் மனஉறுதியை வலியுறுத்தியதுடன், எதிர்க்கட்சிகளின் செயல்களை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது, நீ ஏன் பயப்படுற.? மு.க ஸ்டாலினுக்கு அவ்வளவு பயமா.

“ஒரு தொண்டனை கூட யாராலும் பயமுறுத்த முடியாது. ‘பயம்’ என்ற வார்த்தையே அண்ணா திமுகவுக்கு கிடையாது. நீங்க சொன்னீங்களே, 2031 வரைக்கும் பாஜகவோட ஒட்டுமொத்த உறவு இல்லைன்னு. ஆனா இப்ப மீண்டும் கூட்டணி வைத்ததுக்காக எங்களை கேள்வி கேக்கறீங்க. இது எங்க கட்சி. நாங்க யாரோட வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். நீ ஏன் பயப்படுற? நீ ஏன் நடுங்குற?” எனக் கேட்ட EPS, தனது கட்சி எந்த அச்சத்துக்கும் தலை வணங்காது என்பதை தெளிவாக வெளிப்படுத்தினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு எதிர்க்கட்சி தலைவரை நோக்கி இப்படிச் சொல்வது ஒரே அச்சத்துக்கே அடையாளம் என விமர்சித்த EPS, “பயமா வந்துட்டதுல்ல, அண்ணா திமுக வந்தா பயம் வந்துட்டா?” என நேராக சவால் விடுத்தார். “இன்றைய முதல்வர் பதவியில் இருக்குறவர் 2026-க்கு பிறகு அந்த இடத்துல இருக்கமுடியாது. மேலும் அப்போ முழுமையான பெரும்பான்மை உடைய ஆட்சி, EPS தலைமையில் அமையும்” என அதிரடியாக அறிவித்தார்.