தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உரிய மரியாதை இல்லை என்றார் இபிஎஸ். மேலும், “அவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

தங்களை விட்டுவிட்டு திமுக கூட்டணியில் தொடரும் கட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை நிகழ்த்திய அவர், “நாம் உருவாக்கும் அணிக்கு வரும்போது ரத்தின கம்பளத்தோடு வரவேற்பு அளிக்கப்படும்” என ஆழ்ந்த உறுதியோடு தெரிவித்தார்.

ஆனால் இபிஎஸ் விடுத்த அழைப்புக்கு திருமாவளவனின் பதில் மிகக் கடுமையானதாக இருந்தது. “பாஜக இருக்கும் எந்த கூட்டணியிலும் விசிக செல்லாது” என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன் மூலம், திமுக கூட்டணியில் இருந்து விலகும் வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் திருமாவளவன்