தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய மோசடி செய்வதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். “மாநில அரசால் நீட் தேர்வை ஒருபோதும் ஒழிக்கவே முடியாது என்பது அப்பட்டமாகத் தெரிந்திருந்தும், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம்’ என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை?” என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வருவதற்காக மாணவர்களையும் பெற்றோரையும் திமுக ஏமாற்றிவிட்டதாக அவர் சாடினார்.

​தங்களுடைய ஆட்சியை “முன்மாதிரி ஆட்சி” என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இவர்கள், உண்மையில் “மோசடி ஆட்சிகளிலேயே மிக முக்கியமான ஆட்சி” என்று விஜய் ஒரே அடியில் திமுக-வை காலி செய்தார். திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக-வின் உண்மை முகத்தை அவர் தஞ்சை மண்ணில் வைத்துத் தோலுரித்துக் காட்டினார். விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தேர்தல் களத்தில் நீட் விவகாரத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது.