தஞ்சாவூர் தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், கடந்த தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு ஆளுங்கட்சியைத் திணறடித்தார். “சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகச் சொன்னீர்களே, அது என்ன ஆனது? கரும்புக்கு ஆதார விலையாக 4,000 ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே, அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா? அதேபோல், திருமணமாகாத பெண்களுக்கு அரசு வேலை என்று சொன்னீர்களே, அது இப்போது எங்கே போனது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

​அரசு கொடுத்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதை அவர் கடுமையாகக் கண்டித்தார். தான் கேட்ட இந்தக் கேள்விகள் எல்லாம் வெறும் ‘சாம்பிள்’ தான் என்றும், இன்னும் பல ஏமாற்றங்களை மக்கள் சந்தித்து வருவதாகவும் அவர் ஆவேசமாக முழங்கினார். மக்களை ஏமாற்றுவதையே இந்த அரசு ஒரு வாடிக்கையாக வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டிய விஜய்யின் இந்தப் பேச்சு, அங்கிருந்த மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.