தஞ்சாவூரில் பரப்புரையைத் தொடங்கி இருக்கும் விஜய் தனது உரையின் போது, திமுக அரசின் ‘நிதிச் சுமை’ காரணத்தைக் கிண்டல் செய்தார். “மக்களோட அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைன்னு கேட்டா மட்டும் நிதிச் சுமைன்னு சொல்றீங்க, ஆனா சிலை வைக்கிறதுக்கு மட்டும் எங்கிருந்து சார் காசு வருது?” என்று நேரடியாகவே முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

சிலைகளை விட மக்களின் பசிதான் முக்கியம் என்றும், முதலில் மக்களுக்குச் சாப்பாட்டுக்கு வழி பண்ணுங்க, சிலை வைக்கிறதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்றும் தஞ்சையில் விளாசினார்.