ஒரு இந்தியக் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை வாழ்த்தி வரவேற்பதற்காக, தங்களின் செல்லப் பிராணியான பூனையின் கால் தடங்களைப் பயன்படுத்திய மனதைக் கவரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் வழக்கமாகப் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும்போது, சுப காரியங்களின் அடையாளமாகவும் அதிர்ஷ்டத்திற்காகவும் குங்குமம் அல்லது சிவப்பு நிறச் சாயத்தில் குழந்தைகளின் கால் தடங்களை வாகனத்தில் பதிப்பது இந்தியக் குடும்பங்களின் மரபாகும். ஆனால், இந்த முறை அந்தப் பழமைவாத வழக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் அழகான ஒரு புதிய வடிவத்தை இக்குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.
인도에서 어느 가족의 아들이 새 오토바이를 샀다. 어머니는 고양이를 안고 축복 의식을 치렀다.
고양이가 불길하다는 나라도 있고, 고양이로 행운을 비는 나라도 있다. 이 어머니는 후자였다. 고양이도 나쁘지 않은 표정이다. pic.twitter.com/d28ktBKdbx
— 고양이 트윗 번역계猫ポスト翻訳垢🐱 (@nihongowacaran) June 16, 2026
“>
இதனால் மகன் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்குப் பூஜை செய்யும்போது, அவரது தாய் தங்களது செல்லப் பூனையின் கால்களைச் சிவப்புச் சாயத்தில் நனைத்து, அதன் குட்டிப் பாதத் தடங்களை பைக்கின் முன் சக்கரத்தில் மெதுவாகப் பதிக்கிறார். இந்தச் சடங்கு முழுவதும் அந்தப் பூனை எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மிகவும் அமைதியாகவும் சமத்தாகவும் ஒத்துழைப்பது பார்ப்போரைக் கவரும் வகையில் உள்ளது.
இந்நிலையில் பூனைகளைச் சகுனத் தடையாகக் கருதும் சில மூடநம்பிக்கைகளுக்கு மத்தியில், அதைத் தங்கள் குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினராக நினைத்து இந்தச் சுப நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்ட அந்தக் குடும்பத்தின் அன்பை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
