மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தவறாக நிறுத்தப்பட்ட மினி எஸ்யூவி காரை, ஒரு நபர் தனது வெறும் கைகளால் தள்ளி நகர்த்திய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகி வருகிறது. குடியிருப்புப் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அந்த காரின் ஒரு பகுதி சாலையை மறித்தபடி இருந்துள்ளது.

மேலும் இதைக் கவனித்த மற்றொரு நபர், “வண்டி சாலையை மறைத்துக் கொண்டிருக்கிறது, ஏதாவது செய்யுங்கள்” என்று காரின் உரிமையாளரிடம் கூறியுள்ளார். உடனே அந்த காரின் உரிமையாளர், சற்றும் யோசிக்காமல் தனது பையை காரின் மேல் வைத்துவிட்டு, வெறும் கைகளால் காரை நடைபாதையை நோக்கி பலமாகத் தள்ளியுள்ளார். அவர் தள்ளிய வேகத்தில் அந்த மினி எஸ்யூவி கார் நகர்ந்து சாலைக்கு வழிவிட்டது.

“>

இதனால் காரை நகர்த்தி முடித்ததும் அவர் கேமராவைப் பார்த்து புன்னகைக்கும் இந்த சுவாரசியமான காட்சி சமூக ஊடகங்களில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு, “இத்தனை நாள் ஜிம்மிற்குச் சென்றதற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது” என்ற வாசகத்துடன் நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

“உடற்பயிற்சிக்குச் செல்வதற்கு முன் செய்யும் ஒரு சாதாரண வார்ம்-அப் இது”, “பார்க்கிங் செய்யத் தெரியாவிட்டாலும், இவரிடம் அசாத்திய பலம் இருக்கிறது” எனப் பாராட்டி, இந்த சூப்பர்மேன் செயலை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.