” பெண்களுக்கு இப்போ பாதுகாப்பு அதிகமா இருக்குறதாலதான் பயமில்லாம தைரியமா வெளியே வர்றாங்க !” என்று பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் கோட்டை வட்டாரத்தில் மிக ஆக்ரோஷமாகப் பதிலளித்தார்.

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, கடந்த 2024-ஆம் ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 வழக்குகள் வரை பெண்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்களை விட, தற்போதைய சூழலில் குற்ற வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதே சமயம், தற்போதைய ஆட்சியில் காவல்துறை மீதும் அரசின் மீதும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அசாத்திய பாதுகாப்பு உணர்வின் காரணமாகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வித பயமுமின்றி தங்களுக்கு நேர்ந்த அநீதிகளைத் தைரியமாக வெளியே வந்து புகாராகப் பதிவு செய்வது அதிகரித்திருக்கிறது என்றும், குற்றம் எங்கு நடந்தாலும் எந்தவித பாராபட்சமும் இன்றி துரித நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர இந்த அரசு வேலை செய்து வருகிறது என்றார். இதனை சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு எனப் பொதுமைப்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.