“திட்டத்தோட பேரை மாத்துனா மட்டும் மக்கள் மனசுல இருக்குற ஸ்டாலின் பேரை அழிச்சிரலாம்னு நினைக்கிறீங்களா , இது ரொம்ப குறுகிய எண்ணம்!” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ( புதிய அரசுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான முறையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நான் முதல்வன்’ திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் பெயரிலோ அல்லது கலைஞர் பெயரிலோ தொடங்கப்பட்ட திட்டம் கிடையாது என்று சுட்டிக்காட்டிய அவர், ஆனால் ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்ற பெயர்தான் சட்டென்று ஞாபகத்திற்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தோடு தற்போதைய தவெக அரசு அந்தத் திட்டத்தின் பெயரை அடியோடு மாற்றி, அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இருந்த முந்தைய சாதனைப் பதிவுகளையும் மொத்தமாக நீக்கியுள்ளது என்று அடுக்கடுக்கான பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நிர்வாகக் காரணங்களைச் சொல்லி முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்களின் அடையாளங்களை அழிக்கத் துடிக்கும் தவெக அரசின் இந்த உள்நோக்கமுடைய நடவடிக்கையைத் திமுக ஒருபோதும் சும்மா வேடிக்கை பார்க்காது என்றும் அவர் மிக ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.
