தெலுங்கானாவில் இருக்கும் பள்ளியில் சத்ய நாராயணா என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவர் பெண்கள் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று ஆசிரியர் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இவரால் பாதிக்கப்பட்ட ஆறாம் வகுப்பு மாணவிகள் தங்களது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர் சத்யநாராயணத்தை செருப்பால் அடித்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சத்திய நாராயணாவை கைது செய்தனர்.