கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கம்பிவேலி அருகே நிர்வாண நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த 35 வயது மதிக்கத்தக்க நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.