கோயம்புத்தூரில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரி மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போதைப்பொருள் புழக்கத்தைக் வெளிச்சம் போட்டுக் காட்டியதாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது இன்ஜினியரிங் மாணவர் கே. அமுதன், கோவையில் சக மாணவர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி அருகே வழிமறிக்கப்பட்ட மாணவன், உருட்டுக்கட்டைகள் மற்றும் இரும்புத் கம்பிகளால் தலை மற்றும் உடல் பகுதிகளில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். விடுதி வளாகத்தில் ரகசியமாக நடைபெற்று வந்த கஞ்சா விற்பனை மற்றும் விநியோகம் குறித்த உண்மைகளை வெளியே அம்பலப்படுத்திய காரணத்தினாலேயே தனது மகனை இந்தக் கும்பல் திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டியுள்ளதாகக் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

“>

 

கல்வி நிலையங்கள் அமைந்துள்ள வளாகங்களிலேயே கஞ்சா மாபியாக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும், அது அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீதமாக மாறியிருப்பதும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.