கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சக மாணவர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட மாணவரின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கமளித்துள்ள போதிலும், இதுவொரு சாதாரண மோதல் அல்ல என்றும், இதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாகவும் பெற்றோர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொல்லப்பட்ட மாணவன் போதைப்பொருள் விவகாரத்திற்கு எதிராகக் குரல்கொடுத்ததால் போதைப்பொருள் மாபியா கும்பலே திட்டமிட்டு அவனைக் கொலை செய்துள்ளதாக அவனது பெற்றோர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள போதிலும், காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்களை நம்ப முடிலையென்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கல்லூரியின் பெயரைக் காப்பாற்றவும், உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவும் சில தரப்பினர் முயல்வதாகச் சந்தேகங்கள் வலுத்துள்ளன.
பாதுகாப்பானதாகக் கருதப்பட வேண்டிய கல்வி நிலையத்திற்குள்ளும், விடுதி வளாகத்திற்குள்ளும் போதைப்பொருட்கள் எப்படி எளிதாக உள்ளே நுழைந்தன என்பது குறித்து விரிவான மற்றும் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல பகுதிகளில் போதைப்பொருளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது பெற்றோரிடையே கடும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
As per their parents it seems like Drug mafia have murder that kid after becoming whistle blower. @imrajmohan need to do proper investigation. Sorry what you have said seems not believable.
They are trying to save college name and drug mafia. College need to be investigated…
— MacroMatrix (@MacroMatrix1) August 12, 2026
“>
கல்வி நிலையங்களை உலுக்கியுள்ள இந்தக் கொலை வழக்கு மற்றும் போதைப்பொருள் பின்னணி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவரத் தீவிரமான மற்றும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
