தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மிக முக்கிய மற்றும் அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் ஊழலுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மாவட்டங்களுக்கு ஆய்வுப் பயணங்களாகச் செல்லும்போது, அதற்கான செலவுகளைத் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செய்வதாகக் கூறி வந்த சில அதிகாரிகள், அதைக் காட்டியே பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த மோசமான நடைமுறைக்குத் தற்போது முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் அனைத்து அதிகாரப்பூர்வ ஆய்வுக் செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என அதிரடி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் “நாங்கள் ஆய்வுக்குச் செலவு செய்தோம், அதனால் பணம் வசூலிக்கிறோம்” என்ற ஏமாற்று வேலைகளுக்கும், லஞ்சத்துக்கான நியாயப்படுத்துதல்களுக்கும் இனி எள்ளளவும் இடமில்லை. ஊழலை அதன் வேரிலேயே கிள்ளியெறியும் நோக்கில் முதல்வர் விஜய் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான நடவடிக்கை, அரசியல் களத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
TVK Government’s next BIG STRIKE against corruption! 🔥
One more excuse for bribery has now been SHUT DOWN.
Some officials claimed they were forced to spend from their own pockets whenever Ministers and senior officers visited districts for inspections and used that as an…
— Raavanan (@raavanamavan7) August 12, 2026
“>
இனிமேல் லஞ்சம் வாங்குவோர் மீது எந்தவிதச் சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அதனைத் தூய்மையான நிர்வாகத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாகவும் அரசியல் நோக்கர்கள் பார்க்கின்றனர்.
