“அரசியல் தெரியாது” என்று தங்களை விமர்சிப்போருக்குத் தவெக தனது செயல்திட்டங்கள் மூலமாகப் பதிலடி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், மக்களின் நலன்களையும் மட்டுமே தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்துவரும் அரசியல் நகர்வுகள் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன.
நீட் தேர்வு ரத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவிற்கான கடும் எதிர்ப்பு போன்ற மாநில உரிமைகள் சார்ந்த விஷயங்களில் தவெக தனது நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்துவதோடு, விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனுக்கான சிறப்பான திட்டங்களையும் அறிவித்து வருகிறது.
சில கொள்கைகளில் மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பொது நலனுக்காகத் தங்களது பக்கம் ஈர்த்து ஆதரவு பெறச் செய்வதே தவெகவின் தனித்துவமான அரசியல் நுணுக்கம் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் உரிமையும் மக்கள் நலனுமே எங்களின் (தவெக) @TVKPartyHQ முன்னிலை! 💥
“அரசியல் தெரியாது” என்றவர்களுக்கு இதோ TVK-யின் அதிரடி பதில்! 😏 @arivalayam@AIADMKITWINGOFL
🔹 NEET எதிர்ப்பு
🔹 Delimitation-ல் உரிமைப் பாதுகாப்பு
🔹 FCRA திருத்த மசோதா எதிர்ப்பு
🔹 தமிழ்த்தாய்… pic.twitter.com/CVlMQhA1zB— மித்திரன் சதீஸ் (@SATISH122104) August 12, 2026
“>
பாரம்பரியக் கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தங்களது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் அதிரடியான நிலைப்பாடுகள் மூலமாகவே தவெக பதிலடி கொடுத்து வருவது மாநில அரசியலில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
