தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நேற்று முதலமைச்சர் விஜய் வந்தபோது, சபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், கே.என். நேருவும் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்தனர். இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அரசியல் எதிர்ப்புகள் இயல்பானது என்றாலும், சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முதலமைச்சர் பதவி என்பது மக்களின் ஜனநாயகத் தீர்ப்பால் உருவாகும் அரசியலமைப்புப் பொறுப்பாகும். அந்தப் பதவிக்கு மரியாதை செலுத்துவது தனிநபருக்கு அடிபணிவது அல்ல; மக்களின் ஜனநாயக உரிமைக்குத் தரும் மரியாதையாகும்.
அரசின் கொள்கைகளை எதிர்க்கவும் கடுமையாக விமர்சிக்கவும் எதிர்க்கட்சிக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அந்த எதிர்ப்பு சபை நாகரிகத்தைத் தாண்டிப் போகக்கூடாது. மூத்த தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைச் சபை ஒழுக்கத்தை, உதயநிதி ஸ்டாலின் பின்பற்றத் தவறிவிட்டதாகக் கண்டனங்கள் எழுகின்றன.
உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்!
முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்கும் அதே நேரத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் இருந்திருப்பது, அரசியல்… pic.twitter.com/pWNTkEdBOb
— Jegadesh TVK (@JegadeshTVK) August 12, 2026
ஒரு அரசியல்வாதியை அவர் வகிக்கும் பதவி உயர்த்துவதில்லை; அவரது நடத்தையும் ஜனநாயக மாண்பும்தான் உயர்த்தும். “அரசியல் எதிர்ப்பைக் காட்டுங்கள், ஆனால் சட்டமன்ற மாண்பைச் சிறுமைப்படுத்தாதீர்கள்; மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்ற கருத்துகளுடன் இந்த விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
