தமிழக அரசியலில் தவெக-வின் அபார வெற்றிக்குப் பிறகு, புதிய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், தனது பழைய அரசியல் நினைவுகளையும் தற்போதைய மாற்றத்தையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, ஆரம்பத்தில் வெறும் 7 பேரை மட்டும்தான் அமைச்சர்களாக நியமித்தார்” என அவரது நிர்வாகத் திறமையை நினைவு கூர்ந்தார்.
அதேபோல், இன்றும் தனது பாக்கெட்டில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதாகக் கூறிய செங்கோட்டையன், “யார் ஒருவருடைய படம் மட்டும் போதும் என்று நினைத்தார்களோ, அவர்களின் கனவு சுக்குநூறாகிவிட்டது” என எடப்பாடி பழனிசாமியைப் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மட்டுமே சிறப்பான நிர்வாகத்தை வழங்கி, தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக வரலாறு படைக்க முடியும் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
பண பலத்தை முறியடித்து விஜய் வரலாறு படைத்துள்ளதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
