உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியா நகரில் உள்ள ஒரு வீட்டில், நடந்த சம்பவம் பரபரப்பையும் பெருமையையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீட்டின் தோட்டத்தில், செடிகளுக்குள் பதுங்கியிருந்த விஷபாம்பை பார்த்ததும், வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று தைரியமாகச் சென்று அதனைச் சமாளிக்க முயன்றது. ஒரு நிமிடம் கூட தயக்கமின்றி பாய்ந்த அந்த நாய், பாம்பை கடித்து தூக்கி வீசியது மட்டுமல்லாமல், தொடர்ந்து தாக்கி பாம்பை உயிரிழக்கச் செய்தது.

இந்த அசாதாரணமான வீரதீர செயல், வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. நாயின் செயலை பாராட்டி நெட்டிசன்கள் “இது தான் உண்மையான பாதுகாவலன்,” “நாய்களே நம்மை உயிரோட பாதுகாப்பாங்க” என பெருமிதத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

இந்த சம்பவம், வளர்ப்பு நாய்களின் விசுவாசத்தையும் தன்னலமற்ற துணிச்சலையும் மேலும் நினைவுட்டுகிறது.  வீட்டை மட்டுமல்ல, அதில் உள்ள ஒவ்வொருவரையும்  காக்கத் தயார் எனும் உணர்வோடு வாழும் நாய்கள் மீது மக்களின் நேசமும் நம்பிக்கையும் இந்த வைரல் சம்பவத்துடன் மேலும் அதிகரித்துள்ளது.