திருமண நிச்சயதார்த்த விழா என்பது ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் நினைவுகளால் நிறைந்த சிறப்பான தருணமாகும். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், அந்த மகிழ்ச்சி ஒரு நொடியில் பதற்றமாக மாறிய காட்சியை வீடியோவாகப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மணமக்கள் மோதிரம் மாற்றும் தருணத்தில், அங்கு இருந்த ஒரு வயதான பெண்மணி, கொண்டாட்டக் கருவியான ஃபயர் கேனை தவறுதலாக இயக்க, அதிலிருந்து வெடிக்கும் ஒலி மற்றும் புகை சுற்றியுள்ள  அனைவரையும் பதற வைத்தது. ஒரு நிமிடத்திற்கு அங்கு இருந்த உறவினர்கள் பயத்தில் ஓடிஒளிந்துகொண்டனர். பின்னர், இது பரிதாபமான தவறுதலாகவே நடந்தது என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது சற்று நிம்மதி அடைந்தனர்.

“>

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலரும் இதைப் பார்த்து சிரித்து ரசித்தாலும், “இந்த மாதிரியான பார்ட்டி கருவிகளை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கையாளும்போது கூடுதல் கவனம் தேவை,” என்று பதிவிட்டு வருகின்றனர். மகிழ்ச்சியான தருணங்களிலும், சற்று உஷாராக இருந்தால் நமது நினைவுகள் இனிமையாகவே இருக்கும் என்பதை நினைவூட்டும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.