இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நாளும் கழிக்க முடியாத நிலை உருவாகி விட்டது. அதிலும் ஆண்ட்ராய்டு போன்கள் வருவதற்குப் பிறகு, ஒட்டுமொத்த உலகமும் உள்ளங்கையிலேயே சுழல்கிறது என்றே சொல்லலாம். எதையும் தேட, காண, பகிர்ந்து கொள்ள, பேச—all in one என்ற மாதிரி செயல்படுகிறது இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள். இதனால்தான் பெரும்பாலான மக்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே நாடுகிறார்கள்.

இந்நிலையில், Google ஆண்ட்ராய்டு போன்களில் ஒரு புதிய அப்டேட்டை மெளனமாக கொண்டு வந்துள்ளது. பொதுவாக, ஒரு அழைப்பு வரும் போது, அந்த அழைப்பை எடுப்பதற்குப் மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்தது. ஆனால், தற்போது அந்த வழக்கமான Caller Interface மாறி, பக்கவாட்டில் ஸ்வைப் செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றம் காரணமாக, பலர் நேரில் அழைப்பு வந்தபோது அதை எடுப்பதா, துண்டிப்பதா என்று புரியாமல் குழப்பத்தில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் நையாண்டி பாணியில் மீம்ஸ் போட்டு தங்கள் கோபத்தையும் குழப்பத்தையும் பதிவு செய்து வருகின்றனர். “அழைப்பு வந்தா எங்கே ஸ்வைப் பண்ணறதுனே தெரியல, என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். ஆண்ட்ராய்டு புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பயன்படுத்துவதில் எளிதாக்க முயன்றாலும், பழக்க வழக்கத்தை மாற்றும் இந்த விதமான மாற்றங்கள், தொடக்கத்தில் சற்று பரபரப்பாகத்தான் இருக்கும் என்பது நிச்சயம்!
