பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த முஃபசில் காவல் நிலைய எல்லையில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவலர், பனியன் மற்றும் உள்ளாடை மட்டுமே அணிந்து, மது போதையில் ஒரு பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தகராறு  செய்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இரவு நேரத்தில்  பதிவு செய்யப்பட்டது. அந்த காவலர் வீட்டுக்குள் நுழைந்து விசாரணை என்ற பெயரில் அமர்ந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவர் மது அருந்தும் காட்சிகள் மற்றும் சமாதானப்படுத்த வந்த மற்ற போலீசாருடன் நடந்த  விவாதங்கள் அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளன.

“>

 

பீகாரில் மது தடைச் சட்டம் நடைமுறையில் இருந்தும், காவலரே இப்படித் திருப்தி அடைய மது அருந்தும் வீடியோ பகிரப்பட்டதும், மக்களில் கோபத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது குற்றம்சாட்டப்பட்ட காவலர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை போலீசார் தேடி வருகின்றனர் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.