மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி சங்கமம் ஒன்று பாலியல் கல்வியை தற்போது பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் சமீபத்திய படமான OMG 2 என்ற திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உல்லாஸ் நகரை சேர்ந்த சிந்து கல்வி சங்கமம் மகாராஷ்டிராவில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்திய முதல் கல்வி நிறுவனமாக தற்போது மாறியுள்ளது.

அக்ஷய் குமார் மற்றும் பங்கஜ் திரிபாதி நடித்த இந்த திரைப்படத்தில் இந்தியாவில் பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான கதைக்களம் அமைந்திருந்தது. இந்த கல்வி மூலம் பள்ளி மாணவர்களிடையே பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் சமத்துவமுள்ளிட்டவை விழிப்புணர்வாக ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.