நாடு முழுவதும் அனைத்து மக்களுமே விறகு அடுப்புக்கு மாற்றாக சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்புகளையும் மானிய விலையில் சிலிண்டர்களையும் வழங்கி வருகிறது. எனவே மக்கள் சிலிண்டரை புக் செய்து கொள்ள whatsapp, வெப்சைட் செல்போன் நம்பர் போன்ற பல வழிகளில் மூலமாக புக் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் இதில் புதிய முறை ஒன்றை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதாவது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பயனர்கள் தங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து 7588888824 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சிலிண்டர் பதிவு செய்யலாம். மேலும் இதற்கு ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்தி கொள்ள முடியும். அதேபோல 8454955555 என்ற செல்போன் நம்பருக்கு இண்டேன் பயனர்கள் மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டர் புக் செய்து கொள்ளலாம். சிலிண்டர் புக் ஆனதும் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். இந்த வசதியானது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.