கர்நாடக மாநிலத்தில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு மூன்று லட்சம் வரை கடன் உதவியை கேஎம்டிசி எனும் மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி ஆணையத்தின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மையின மாணவர்களுக்கு கடன் தொகையை ஐந்து லட்சமாக அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஜாபீர் அகமது கான் தெரிவித்துள்ளார்.

அதோடு வெளிநாடுகளில் பயிலும் சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த மாணவர்களுகு வழங்கப்படும் கடன் தொகை 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.