நாட்டின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையான கல்வி பாடத்திட்டங்களை கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டத்தை காட்டிலும் கூடுதலாக தொழிற் பயிற்சி பாடங்கள், கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை புகட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பத்து 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக இரண்டு மொழியாவது தெரிந்திருக்க வேண்டும் என்று புதிய பாடத்திட்டத்தின் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது . அதாவது பள்ளி மாணவர்கள் மேல் படிப்பை தொடரும்போது பிற நாட்டு மாணவர்களுக்கு இணையாக குறைந்தது இரண்டு மொழிகளையாவது கற்று தெரிந்திருக்க வேண்டும் எனவும் அந்த இரண்டு மொழிகளில் கட்டாயமாக ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.