கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நள்ளிரவில் ஒரு பெண் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி உதவி கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் சிசிடிவி காட்சிகளும் வெளியானதால், அந்த பெண் உண்மையில் உதவி கேட்டாரா அல்லது வேறு நோக்கத்திற்காக வந்தாரா என்ற சந்தேகத்தில் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி விளக்கம் அளித்துள்ளனர். கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் உறவினர்கள் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தண்ணீர் கேட்டு வீடுகளின் கதவுகளைத் தட்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
