மலேசியாவில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம் அடைந்து 6 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்தார். அந்த நபரின் மனைவி நூருல் தனது கணவரை குளிக்க வைத்து, உணவு கொடுத்து டயப்பர் அணிவித்து குழந்தை போல பார்த்துக் கொண்டார்.
தற்போது அவரது உடல் நலம் சீரானது மனைவியுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த நபர் நூருலை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இதனை அறிந்த நூருல் கணவர் தன்னை விட்டு பிரிந்தாலும் அவரை அன்பாக பார்த்துக் கொள்ளுமாறு புதிய மனைவியிடம் அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூருலுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
