ஐரோப்பிய நாடுகள் தற்போது வரலாற்றில் கண்டிராத கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. பிரான்சில் 44°C, இங்கிலாந்தில் 36°C மற்றும் ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் 42°C-க்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த அதீத வெப்பத்தால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நதிநீர் குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுவதால் அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கடும் வெப்பத்தைத் தவிர்க்க இரவு நேரங்களில் வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏரிகள் மற்றும் நதிகளில் குளிக்கச் சென்றவர்களில் 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்; மேலும், காரில் சிக்கிய இரண்டு சிறு குழந்தைகள் மயங்கி உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.

இதற்கு ‘ஹீட் டோம்’  எனப்படும் வானிலை மாற்றமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள வீடுகளில் 20% மட்டுமே ஏர் கண்டிஷன் வசதி இருப்பதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by WISDOMTALKS PODCAST | TAMIL INFO & INSIGHTS (@wisdom_talks_podcast)

“>

சஹாரா பாலைவனத்திலிருந்து வரும் வெப்பக் காற்று வெளியேற முடியாமல் சிக்கிக்கொள்வதே இந்த நிலைக்குக் காரணம். இது வெறும் தொடக்கம் தான் என்றும், காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் இத்தகைய வெப்ப அலைகள் இன்னும் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.