ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வயதான ஜோசப் மெக்ரல்-பெட்டப் என்பவர், உலகின் மிக அதிக சத்தமாக அலறி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கேன்பெராவைச் சேர்ந்த இவர், சுமார் 122.4 டெசிபல் என்ற அளவில் “நவ்” என்று கத்தியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இது ஒரு ஜெட் விமானம் பறக்கும்போது எழுப்பும் சத்தம் அல்லது ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தை விடவும் அதிகமானது. கடந்த 32 ஆண்டுகளாக அனி லீசா பிளானகன் என்ற ஆசிரியர் வைத்திருந்த 121.7 டெசிபல் என்ற முந்தைய சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

இந்தச் சாதனையைப் பற்றிப் பேசிய ஜோசப், இதற்காகத் தான் எந்தவிதமான சிறப்புப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், இந்தச் சாதனையை அடைய ஏழு முறை முயற்சிக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

இந்த முயற்சியின் விளைவாகச் சில நாட்களுக்குத் தனது குரல் முற்றிலும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அவர், ஏற்கனவே 2019-ம் ஆண்டில் வில்வித்தையிலும் ஒரு சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளங்களில் இவரது குரல் வளம் மற்றும் சாதனை குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.