மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள ஜிராபூர் பகுதியில், பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காளை மாடு ஒன்று திடீரென அவரை முட்டித் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜமை காலனியில் நடந்த இந்தச் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணை, பின்னால் வந்த காளை மாடு அதிவேகமாக வந்து தலையால் பலமாக முட்டியது. இதில் நிலைதடுமாறி விழுந்த அந்தப் பெண் சில நிமிடங்கள் மயக்கமடைந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாகப் பெரிய காயங்கள் ஏதுமின்றி அவர் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஜிராபூர் பகுதியில் தெருக்களில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் எந்தவொரு வலுவான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
मध्य प्रदेश सड़क पर चल रही लड़की पर अचानक आवारा सांड ने किया हमला लड़की गंभीर रूप से घायल pic.twitter.com/Egmy01mGPb
— Lokmanchtoday (@lokmanchtoday) June 25, 2026
“>
இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க, தெருக்களில் சுற்றித் திரியும் காளைகளையும் கால்நடைகளையும் பிடித்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
