சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நான்காவது பெண் குழந்தை பிறந்தது.
தாயும் சேயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (நவ. 20) காலை ராஜேஸ்வரி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாகக் குழந்தையைச் சோதித்த மருத்துவர்கள், அது உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
